twitter
    Find out what I'm doing, Follow Me :)

இந்திய அணியின் மனப்போக்கை மாற்றிய "தாதா"!


1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் உதித்த சௌரவ்கங்கூலி என்ற 'பெங்கால் டைகர்', ரசிகர்கள் செல்லமாகஅழைக்கும் "தாதா"வின் கிரிக்கெட் வாழ்வு, அவரேஎதிர்பார்த்ததைப்போல இந்தியா ஆஸ்ட்ரேலியாவைவீழ்த்தியது மூலம் மகிழ்ச்சிகரமாகநிறைவடைந்துள்ளது.தோனி தலைமையில் இந்தியஅணி அடுத்தக் கட்டத்தை நோக்கி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில்,இந்த உயர்விற்கு தனது தலைமைப் பொறுப்பின் கீழ்,நியாயமற்ற அவப்பெயர்களுடன், அடித்தளமிட்டுக்கொடுத்த கங்கூலியை நாம் மறக்க முடியாது.குறிப்பாகஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் நாக்பூர்டெஸ்டிற்கு முன்னால் பேசிய வீர வசனத்தில், நாங்கள் டெஸ்டை வென்றுகங்கூலிக்கு மகிழ்ச்சியான ஓய்வு தினங்களை மறுப்போம் என்றார். அவரது பேச்சுவெறும் பேச்சு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டு இந்த வெற்றி கங்கூலிக்கும்அவரது மன உறுதிக்கும், அவர் கிரிக்கெட்டை ஆடிய விதத்திற்கும், அவர்அணியை வழி நடத்திய திறனிற்கும் ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.உலகின்மிகப்பெரிய பேட்ஸ்மெனாக கருதப்படும் டான் பிராட்மேன் போலவே தன்கடைசி இன்னிங்சில் கங்கூலி ரன்கள் எடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.ஆனால் நாக்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 89 ரன்கள் அணியைவெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.கங்கூலியைப் பற்றிஉலக கிரிக்கெட்டில் பரந்துபட்ட கருத்துக்கள் வளைய வந்துள்ளன. அவரால்பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாது என்று கூறுபவர் உளர், வேறு சிலருக்கோஅவர் "ஆஃப் திசையின் கடவுள்" - அதாவது ஆஃப் திசையில் அவர் ஆடும்டிரைவ்கள், கட் ஷாட்கள் ஆகியவை அவரை டேவிட் கோவருக்கு பிறகு அழகாகவிளையாடும் இடது கை ஆட்டக்காரர் என்று அழைக்க வைத்தது. நம்அனைவருக்கும் கங்கூலியின் ஆக்ரோஷமான அணித் தலைமைப் பொறுப்புபிடித்தமானது, அவரது அணித் தலைமையில் அதிக டெஸ்ட் போட்டிகளைவென்று இந்திய அணியை தற்போது இருக்கும் உயர்வு நிலைக்கும், போட்டிஉத்வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் அடிக்கல் நாட்டியது என்ற வகையில்பலருக்கும் பிடித்தமான ஒரு வீரர் கங்கூலி. வேறு சிலருக்கோ அவர் ஃபீல்டிங்செய்ய லாயக்கற்றவர். இவ்வாறாக கங்கூலி பற்றிய கருத்துக்கள் ஒருபுதிர்ப்பாதையில் பயணிப்பது போல் இருந்து வந்துள்ளன.இந்தியாவின்மிகச்சிறந்த அணித் தலைவர் கங்கூலி என்பதை உலகின் எந்த ஒரு கிரிக்கெட்வீரரும் மறுக்க முடியாது. அவரை பாராட்டிய இலங்கை வீரர்களான ங்ககாரா,ஜெயவர்தனே, ரணதுங்கா ஆகியோர் அவரது தலைமைப் பொறுப்பு பற்றி புகழ்ந்துகூறியுள்ளனர். ஒரு வீரராக கங்கூலியை நாம் முதலில் பார்ப்போம்:


ஒரு வீரராக கங்கூலி
1996ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ஸில்அவர் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தைஎடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன் வருகையை அறிவித்தார்.பிறகு அடுத்த டெஸ்டில் மீண்டும் ஒரு சதம், இப்படித்தான்அவர் துவங்கினார்.இவருடன் திராவிடும் தன் முதல்டெஸ்டை விளையாடினார். இந்தியாவின் மிகச்சிறந்தபேட்டிங் சேர்க்கை அமைந்தது அப்போதுதான்: சச்சின்,கங்கூலி திராவிட். டெஸ்ட் போட்டியில் இவ்வாறு அபாரமாகதுவங்கியவர், ஒரு நாள் போட்டிகளில் அப்போதைய கேப்டன் அசாருதீனின்முடிவின் படி சச்சின் டெண்டுல்கருடன் களமிறக்கப்பட்டார். பிற்பாடு சச்சினும்கங்கூலியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளும் அஞ்சும் ஒரு துவக்கஜோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போதைய உலக சாம்பியன்அணியான இலங்கை அணிக்கு எதிராக 113 ரன்களை விளாசி தன் முதல் சதத்தைஎட்டினார். அதன் பிறகு அதே ஆண்டில் சகாரா கோப்பை கிரிக்கெட்டில் 4 ஒருநாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று தன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் இந்திய அணியை தொடரை வெல்லச் செய்தார்.இந்த தொடரில்தான்அவரது சிறந்த ஒரு நாள் போட்டி பந்து வீச்சு அமைந்தது. 10 ஓவர்களில் வெறும்16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு சதங்களை அடித்தார். ஆனால்இவரது போராட்ட குணம் கிரிக்கெட் உலகிற்கு தெரிய வந்த போட்டி டாக்காவில்நடந்த சுதந்திரக் கோப்பை இறுதிப் போட்டியே. பாகிஸ்தான் நிர்ணயித்த 315ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியை தன் 124 ரன்கள் அதிரடிஇன்னிங்சினால் வெற்றி பெற வைத்தார். 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கைஇந்தியா முதன் முதலாக துரத்தி வெற்றி பெற்றது அப்போதுதான். அதன் பிறகுசில 300 ரன்களை இந்தியா துரத்தும் போதும், இலக்காக நிர்ணயிக்கும்போதுகங்கூலியின் பங்கு அபரிமிதமானது.1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றஉலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக 158 பந்துகளில் 17பவுண்டரிகள் 7 சிக்சர் சகிதம் 183 ரன்களை விளாசினார் கங்கூலி. உலகக்கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிக பட்ச தனிப்பட்ட ரன்எண்ணிக்கையாகும். ராகுல் திராவிடும் கங்கூலியும் இணைந்து குவித்த 318ரன்கள் எந்த ஒரு விக்கெட்டிற்கு இடையேயும் குவிக்கப்பட்ட அதிகபட்சரன்களாகும்.அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன்டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஒரு நாள்போட்டிகளில் அந்த சீசனில் மட்டும் 5 சதங்களை எடுத்து .சி.சி. ஒரு நாள் தரவரிசையில் அவர் முதலிடத்தை பிடித்தார்.பிறகு 272 ஒரு நாள் போட்டிகளில்10,000 ரன்களைக் கடந்ததன் மூலம் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 10,000ரன்களைக் கடந்தவர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார் கங்கூலி.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது பங்களிப்புஅவரது தலைமையின் கீழ் அபாரமாக இருந்தது. மேற்கிந்தியதீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தன் பேட்டிங்கிற்கு புதியபரிமாணம் அளித்த கங்கூலி, அங்கிருந்து தொடங்கி, 2002இங்கிலாந்து தொடரில் அபாரமான இரண்டு அரைசதங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்தியஅணி டெஸ்ட் தொடரில் 0- 1 என்று பின் தங்கியிருந்தபோதுலீட்சில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இவர் அடித்த 138ரன்களும், சச்சினுடன் சேர்ந்து எடுத்த 200-க்கும் அதிகமானரன்களும் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றது.பிறகு 2003 உலகக்கோப்பை போட்டிகளில் 3 சதங்களை அடித்தார். 2004ஆம் ஆண்டு புகழ் பெற்றஆஸ்ட்ரேலிய தொடரில் பிரிஸ்பேனில் அவர் அடித்த 144 ரன்கள் அணியின்உத்வேகத்தை அதிகரித்து. அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்தியா தன்பேட்டிங்கின் மூலம் வறுத்து எடுத்தது நம் அனைவரின் நினைவையும் விட்டுஅகலாதது.ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்களையும் 72 அரைசதங்களையும்41.02 என்ற சராசரியிலும், டெஸ்ட் போட்டிகளில் 113 டெஸ்ட் 7212 ரன்கள் சராசரி42.17 என்றும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40திற்கும் மேற்பட்டசராசரியை வைத்திருக்கும் உயர்வான நிலையில் அவர் தன் ஓய்வைஅறிவித்துள்ளார்.அவரது பேட்டிங் திறன் மீது கடுமையாக விமர்சனம் வைத்தகிரேக் சாப்பல் முதல் தொடங்கி நம் பிஷன் சிங் பேடி வரையிலும், 2006 ஆம்ஆண்டு அணிக்கு மீண்டும் அவர் நுழைந்த பிறகு ஆடிய விதத்தில் நிச்சயம்குறைகாண இடமில்லை. இந்த காலக்கட்டத்தில் கங்கூலியின் சராசரி 60ரன்களுக்கு அருகில் உள்ளது என்பதும், இதே காலக் கட்டத்தில் அணியின் மற்றவீரர்களின் சராசரி இவருக்கு அருகில் இல்லை என்பதும் இவரது பேட்டிங் பற்றிவிமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துள்ளது.இந்தியாவின்சிறந்த அணித் தலைவர் கங்கூலி1998ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரைஇந்திய கிரிக்கெட் ஒரு பெரிய சரிவை சந்தித்து வந்தது. சச்சின் டெண்டுல்கர்கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கிரிக்கெட் உலகை ஆட்ட நிர்ணயசூதாட்டங்கள் உலுக்கி வந்தன. இந்திய கிரிக்கெட்டையும் அது பிடித்துஉலுக்கிவந்தது. அரசல் புரசலாக அசாருத்தீன் மேல் கடும் குற்றச்சாட்டுகள்எழுந்தன. இதனால் சச்சின் டெண்டுல்கரால் ஆஸ்ட்ரேலிய தொடரில் அவர்நீக்கப்பெற்றார்.இவருடன் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியாவும் நீக்கப்பட்டார்.கபில்தேவ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அணியில் கர்நாடக மாநிலவீரர்கள் மட்டும் 8 பேர் இருந்தனர். சச்சின், கங்கூலி கனிட்கர் தவிர அனைவரும்கர்நாடகா வீரர்கள். அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்று தோற்றது.உடனேயே தென் ஆப்பிரிக்க அணி இங்கு வந்தது, சச்சின் டெண்டுல்கர் முதல்டெஸ்டை தோற்றவுடன் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார்.இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டி வரை அணித் தலைமையில் நீடித்தார். அந்தடெஸ்டிலும் இந்தியா தோல்வி. தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியாதோற்றது.




1 மறுமொழிகள்:

Sabarinathan Iyer said...

சௌரவ்கங்கூலி ! சௌரவ்கங்கூலி !


Great player and great person !

Post a Comment