twitter
    Find out what I'm doing, Follow Me :)

காதல் பேருந்து



பேருந்தில்.. பயணித்து சென்று நான்
இறங்குகையில்..மீதம் இருப்பது
உன் நினைவுகள் தான்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மீண்டும் மீண்டும் பயணிக்க தோன்றுகிறது..
உனக்கான நினைவுகளுடன்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பேருந்துக்கு நீ காத்து இருக்கையில்..
திசைகாட்டி பலகை
கூட திரும்பி பார்க்கிறது உன்னை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

காதலை சொல்ல சொல்ல நான்
வந்து செலலும் அந்த பேருந்து எனக்கு
காதல் பேருந்தே..

நட்ச(சு) திரம்... அவள்..



இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கலாம்னு நெனைச்சு ஒரு பெக் பச்ச தண்ணி (உண்மை தானுங்க.) சாப்டுட்டு வந்து மூளைய சொரிஞ்சதுல எனக்கு கொஞ்சம் எகனைக்கு மொகனையா யோசிக்க தோனுச்சு,,. அதன் பிரதிபலிப்பு தான் இங்க..

Oo.......Oo...OO.......oO......

நட்சத்திரங்களை நீ பார்க்கும் போது கூட
நட்சு திரவமாக மாறி விடுகிறது..

Oo.......Oo...OO.......oO......

சூரியன் மன்னிப்பு கோருகிறது உன்னிடம்...
உன்னை பார்த்தவுடன் தான் நான் பிரகாசமாகிறேன்..

Oo.......Oo...OO.......oO......

அந்த கடல் ஓரத்தில் அலை ஒன்றும் சிறு மலை
ஒன்றும் முத்தமிடும் போது நீ சிலையாய் நின்று ரசித்த
காட்சிகள் இன்னும் என் நினைவில்... அழியாமல்.

Oo.......Oo...OO.......oO......

உனது செருப்புகளுக்கு கூட போட்டி நிலவுகிறது..
யாரை முதலில் அணிவது என்று..

Oo.......Oo...OO.......oO......

ரொம்ப ஓவரா யோசிச்சு இருந்தாலும் , மொக்கையா இருந்தாலும் பின்னோட்டம் போட மறந்துடாதீங்க.. கண்டிப்பா பல ________________ எதிர்நோக்கி... நான்..

நினைவுகளுடன்...
மஹா..

தொலைத்து விட்டேன்..என்னை..!



நித்தம் நித்தம் ஒரு கவிதை எழுதி..
அதில் நினைவெல்லாம் உன்னை சுமந்து ,
காலை சூரியன் கண்திறக்கும் வரை
என் பாவை உனக்கான கவிதை இது..
மீண்டும் உன்னை சந்திப்பதற்கான
ஆசையில் நான் அவசரமாக எழுதிய கவிதை
கூட என்னை பார்த்து சிரிக்கிறது..
கவிதையை பெறும் நீ காதல் வயப்பட்டு
கண்ணாலேயே சிரிப்பாயா..? இல்லை..
மௌனத்தாலேயே கொல்லுவாயா..?
இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?
இல்லை.. உன் கவிதை பிடித்து இருக்கிறது..
உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வாயா...?
உனக்கான கவிதை எழுதி முடிக்கையில்..
அங்கு என்னையே நான் தொலைத்து இருந்தேன்,,.
கவிதை எழுதும் போதே உன்னை பற்றியான
சிந்தனைகளை பார்த்தாயா..
நான் காணும் கனவில் கூட உன்னை பற்றியான
நினைவுகள் தான் அன்பே....
மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டுமா என்ன.?
எந்தன் நிலை பற்றி..? நீயே சொல்....

."."."."."."."."."."."

என்ன சொல்லி அனுப்புவேன்..?



விரும்பும் போது விலகி சென்ற அவள்..
இன்று விலகும் போது விரும்பி வந்து நிற்கிறாள்..
நான் என்ன செய்ய?
நீ விட்டுவிட்டு சென்ற நம் காதலும், அதன் நினைவுகளும்
என்னையும் அறியாமல் பாதுகாத்து வருவது தான் தெரியுமா?
காற்றை மட்டும் சுவாசித்த நான் இன்று உன்னையும் சேர்த்து அல்லவா
சுவாசிக்கிறேன்.. அதுவாது தெரியுமா?
நாம் பழகியதற்கு சாட்சியாக இதோ இந்த காதல் கடிதமும்
இருப்பது உனக்கு பிடிக்க வில்லையா?
இதோ..இன்று மட்டும் வந்து என் காதலை கேட்கிறாயே இது
எந்த விதத்தில் நியாயம்?
பதில் சொல் அன்பே..
நான் இப்படியே இருந்துவிடுகிறேன்,..
மீண்டும் வேண்டாம் ஒரு காதல் வலி.

......

காத்திருந்து நான்..!




இறைவனுக்கே தெரிந்து இருக்கிறது..
நீ பிறக்கும் போதே அழகாக இருந்ததின்
காரணமாக தான் படைத்தான்
அந்த வலது ஓரத்து மச்சம் உன் கன்னத்தில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னுடைய பதிலுக்கு காத்திருந்து நான்
என்ன கேள்வி கேட்டேன் என்றே மறந்து போனேன்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனக்கு போட்டியாக எனக்கே தெரியாமால்
என் உதடும் , கன்னமும் , என் நெற்றி பொட்டும்
வரிசையில் காத்து இருக்கிறது உன் முத்ததிற்காக...!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அந்த ரோஜாபூக்கு கூட தெரிந்து இருக்கிறது..
என்னவள் இல்லை என்றால் வாடுகிறது என்னை போல..

* * * * * * *

சூரிய புலம்பல்..!


நான் நாள் முழுவதும் அவள் கூந்தல்
அசைவின் காற்றில் தான் சுவாசிக்கிறேன் .!
நான் வாழ்வதற்கு தேவைப்படும் வெப்பம்
அவள் சிரிக்கும் அந்த வெளிச்சத்தில் தான்..!
அவள் எங்கு இருந்தாலும் அவளை பார்த்து கொண்டு
தான் இருக்கிறேன் ..! நாள் முழுவதும்..!
விடுமுறை நாளில் கூட விடுப்பு எடுக்காமல்..பார்க்க வருகிறேன்.!
உன் விருப்பதிற்க்காக..! இதுநாள் வரை..!

- ஒரு சூரிய பூவின் சந்தோஷ புலம்பல்..!

நானும் உன்னை போலவே தான்.!
வேண்டாம்..பூவே..! வேண்டாம்..!
நீயும் நாளை என்னை போல் ஆகிவிடலாம்..!
நாளையிலிருந்து உன் போக்கை மாற்றி விடு..!
இல்லை என்றால் உன்னையும் ஏமாற்றி விடுவாள்...ஒரு நாள்..!

- நான்..!

கேள்வி-பதில்..!




என்னிடம் இருந்து எளிதாய் விடைகளை பெற்று விடும் நீ
என் கேள்விகளை ஏறடுத்தும் பார்ப்பதில்லை..
ஒ..! அன்பே..இப்போதுதான் புரிகிறது...
ஒரு வேலை பிற்காலத்தில் நிறைய பேசுவதற்கு
இப்போதே சேமிக்க தொடங்கி விட்டாயா?...!

வேண்டாம் அன்பே....நீ பேச வேண்டாம்...
உன் ஒரு நொடி பார்வையே போதும்..
நான் உயிர் வாழ..! நம் காதல் வாழ..!

பிரிவினை..!



காதலே வேண்டாம் என்று சொன்ன உன்னால்...
காதலித்துத்தான் பார் என்றேன்...! காதலித்தோம்..!
எதோ ஒரு சூழ்நிலையால்...
பிரிவோம் என்றோம்..! பிரிந்தோம்..!

பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி
தழுவி முகம் புதைத்து அழும் போது
நீ வடித்தக் கண்ணீரில்..!
எனக்கு அங்கேயே செத்துவிடவேண்டும் என்று தோன்றியது..!
இனியும் வேண்டாம் அன்பே..ஒரு பிரிவினை,,!

வெட்கம் ..!






நீ வகுப்பறையில் நுழையும் போது
கரும்பலகையும் சிவக்கிறது...
என்னைப்போல..,...!

முத்த மழை!!!!!!!!!


நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர..!

சந்தித்த வேளையில்

அன்று நடந்த சந்திப்பிற்கு பின்பு ,

அந்த ஒரு இரவில் நானும் நீயும்
ஒருவரை ஒருவர் செல்லமாய்
நீ என்னை " ச்சீ.. போடா" என்றும் ,
நான் உன்னை "போடி..லூசு" என்றும்
திட்டி கொண்ட காலங்கள் இன்றும் என் நினைவில்.!

இதோ இன்றும் நினைவில் இருக்கிறது,
அன்று நான் தந்த முத்தத்திற்கு , நீ
பதிலேதும் சொல்லாமல் அமைதியாய்
வெட்கப்பட்டு சென்றதும், நானும் உன்னை
பார்க்க முடியாமல் அந்த நொடியில் ,
பார்வை இழந்து நின்றதும்..இன்றும் என் நினைவில்..!

பகல் நேரத்து நிலா எப்படி யாருக்கும் தெரியாமல்
போகிறதோ அதே போல் தான் நானு போகிறேன்..
உன் நினைவுக்கு பிறகு.. ஒரு காதல் பிம்பமாய்..!

நினைவுகள் என்பது நினைப்பது அல்ல...
பல மைல் தூரம் கடந்து நீயும் நானும்
பரிமாறி கொள்ளும் ஒரு ஆழ்ந்த உணர்வு..!
பரிச்சயமாய் நீ எனக்குதான் என்று தெரிந்தும் ,
பரிதவித்து தான் போகிறேன் ஒவ்வொரு நொடியும்..!

* * * * * * * * * * * *

ஆத்மா காதல்

இன்று என்று இல்லை...
என்றாவது ஒரு நாள் அவள் வருவாள்...
என்னிடம் பேசுவாள்...!
என் காதலை பற்றி பேசுவாள்..!
எனக்கு கட்டி பிடித்து முத்தம் தருவாள்..!
ஆனால் அதை எல்லாம் கான
நான் இருக்க மாட்டேன்..
என் ஆத்மா இருக்கும்..!
உன்னோடு வாழ இந்த உடல் தான் கொடுத்து வைக்க வில்லை..
இதோ இன்று என் ஆத்மாவை விட்டு செல்கிறேன்,
பிடித்து இருந்தால் சொல்..!
மீண்டும் நான் பிறக்கிறேன்... உனக்காக..!
நம் காதலுக்காக..! உன் காதலனாய்..!

நாடோடி காதல்



அன்று நீ ஏன் அழுதாய் ..? அழாமல் சென்று இருந்தால்
இன்று நான் நிம்மதியாக இருந்து இருப்பேன்..
நிகழ்வுகள் அனைத்தும் உன்னையே நினைவு படுத்துகின்றன..
அதுவும் ஒரு விதத்தில் நன்மையே எனக்கு..! ஆம்..
இன்று நான் ஒரு காதல் நாடோடியாய் இருக்கிறேனே.!..

உன்நினைவுகள் என்றும் நிலைப்பதில்லை..
நிறுவப்படுகின்றன.. என் காதல் டைரியில்..
தினமும் இரவுகளில் பருகபடுகின்றன..!
நம் காதல்கள்..! உன் நினைவுகளால்..


---------------------