twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஈரமான மனதில் காயமாக்கி சென்றவள் நீ தானா.?


அதெப்படி... நீ மட்டும் அடிக்காமல்,
குத்தாமல் எனது இதயத்தை
காயமாக்கி செல்கிறாய்..?

`````````````````````````````````

சிறு குழந்தைக்கு காலில் வரும்
காயத்தை போல எனக்கும் வருகிறது
காதலில் காயம்...

`````````````````````````````````

நீ முத்தமிட்டு சென்ற இடம்
இன்னும் அழியாத
சுவடாய் என் மனதில்...

`````````````````````````````````

எனது நெஞ்சில் நீ முகம் புதைத்து
அழும் நேரத்தில் காயத்திற்கு
சிறு மருந்து கிடைக்கிறது..

`````````````````````````````````

முதல் நாள் காதல் சொல்ல வந்த நான்
தடுமாறி விழுந்த காயம் தான் நம் காதலின்
முதல் சுவடு...

`````````````````````````````````

0 மறுமொழிகள்:

Post a Comment