twitter
    Find out what I'm doing, Follow Me :)

மின்சார பார்வை...

ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீட்டை
கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்
இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..

**

ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...
இவளின் கண்களில் மட்டும் எப்படி
இவ்வளவு பவர்..?

**

உனது கடைக்கண் பார்வை பட்டு எரி நட்சத்திரமாய்
கீழே விழும் என்னை ஒரு முத்தம் கொடுத்து
எழுப்ப கூடாதா..?

**

ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...
இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்
போய் இருக்க கூடும்...

**

ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே
இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?

**

நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி
பார்த்ததே அதிகம் எனக்கு...

**

குறிப்பு...:

நாமளும் மத்தவங்க போல சும்மா இருந்துடலாம் என்று நினைச்சா ரசிகர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.... இங்க பதிவர் வட்டத்துல நிறைய பேரு ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க.. அவங்க எல்லாரும் யாருன்னு நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்ல... உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்...

0 மறுமொழிகள்:

Post a Comment