twitter
    Find out what I'm doing, Follow Me :)

நீ கோலமிட்டு முடிக்கையில்..



பாருங்கள் இவளை...! எவ்வளவு அழகாக
இடம் மாறி மாறி கோலம் போடுகிறாள் என்று..!
இதை எல்லாம் விட்டு விட்டு எதை எதையோ
ஒளிபரப்பு செய்கிறார்கள்....!

*

நீ கோலமிட்டு முடிக்கையில்.. அதில் உள்ள
பூக்கள் எல்லாம் ஏனோ தெரியவில்லை..
உயிர் பெற்று விடுகிறது..

*

அதிகாலை சோம்பேறி-யாகிய நான்
நீ கோலமிட வருகையில் உனது
காவலனாய் நான்... எனக்கே தெரியாமல்..!

*

நீ கோலமிடும் போது வேடிக்கை பார்க்கும்
சிறு குழந்தைகளுக்கு நடுவில் நானும்..
உனது கோலமிடும் அழகை ரசித்து..!

*

உனது வீட்டு பக்கமாய் செல்கையில்..
உன்னை பார்க்காத துக்கத்தை..உனது
கோலம் சிறிது ஆற்றிவிடுகிறது.

*

0 மறுமொழிகள்:

Post a Comment