twitter
    Find out what I'm doing, Follow Me :)

காத(லி)லை தேடி.

நேற்று வரை நான் உன்னை
தேடி தான் அலைந்தேன்..
கடைசியில் தான் தெரிந்து..
என்னுடைய தேடல் உன்னை பற்றி அல்ல..
என் இதயத்தை தேடி....

--

தேடல் என்ற வார்த்தையே
எனக்கு தேவாரமாக
போய்விட்டது உன்னால்...

--

அன்று உனக்காக தேடி கிடைக்காமல்
போன வண்ணத்துபூச்சி.,
தும்பி எல்லாம் இன்று
என் கையில்... ஆனால் நீ எங்கே..?

--

நான் தேடல் மட்டும் தான்
வாழ்க்கை என நினைத்து
இன்று என் வாழ்க்கையை
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!

--

0 மறுமொழிகள்:

Post a Comment