நீ தொடர்புகொண்டு என்னிடம்
பேசும் போது எல்லாம் நான்
தொடர்பிழந்து நிற்கிறேனே ஏனடி...?
இன்னும் புரியவில்லை காரணம் எனக்கு...!
* * * - - - - - - -
ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்.
*** - - - - - - - -
தொலைபேசியில் பேசும் போது
முத்தம் தரவில்லை என்று வருத்தபடுகிறாய்,
நாம் பேசும் போது நமக்கு பதில் , நமது வார்த்தைகள்
ஒன்றை ஒன்று முத்தமிட்டு கொண்டுதான் உன்னையும் என்னையும்
வந்தடைகிறது என்பதை நான் எப்படி சொல்லி
புரியவைப்பேன் உன்னிடம்...!
*** - - - - - - -
உன்னிடம் பேசுகையில்
உன் "ஹம் ", "ப்ச்" , "ஹேய்"
இந்த வார்த்தைகளுக்கு நடுவில்
மற்றவை தோற்று போய் நிற்கின்றன.
காரணமே தெரியாமல்..
*** - - - - -- - -
ஜோடிப்புறாவை எங்கே காணோம்?
1 week ago


0 மறுமொழிகள்:
Post a Comment