twitter
    Find out what I'm doing, Follow Me :)

எ ஃபார் ஆப்பு வைப்பவன்.

எனக்கு எப்போதுமே... அடுத்தவங்க பேச்ச கேக்குறதே... ஒத்துவராது..(என்னைக்கு தான் கேட்டு இருக்கோம்..?)இதுல.. நம்ம ஸ்ரீ.. பிரதர்... அவருக்கு வச்சி இருந்த ஆப்பு எடுத்து எனக்கு வச்சிட்டார்.. எனக்கு டைரி ல... கிறுக்குகிறது தான் தெரியும்.. வாழ்க்கையில முதல் தடவையா... பதிவு எழுதுறேன்.. அது எழுத வாய்(ஆ)ப்பு- கொடுத்த எங்க ஸ்ரீ. பிரதர் அவர்களுக்கு கோடான கோடி.. நன்றிகள்... ( நல்லா இரு..ராசா.)..
நீங்க நெனைக்குற மாதிரி நான் ஒன்னும்... இந்த வெப்சைட் எல்லாம்.. நெட்ல தேடி இங்க பதிவு போடல.. இது எல்லாம் நாங்க எப்போதும் வழக்கமா பாவிக்கிறது தான்..(?) ..


A -->
http://www.adhikaalai.com

இங்க போனால்.. காலையிலே அதிகாலை சூரியன் எப்படி ஒரு இதமான சூடான வெயில் தருகிறதோ..அது போல் செய்திகள் இங்கு கிடைக்கும். அரசியல் ,கலை, இலக்கியம் மற்றும் பல செய்திகள் கிடைக்கும்..
காலையில வந்த உடனே... நெட் ஆன் பண்ணி.. இங்க தான் போய் இன்றைய செய்தி படிப்பேன்.. ரொம்ப பயனுள்ளதா இருக்கும்..

http://www.abdulkalam.com/kalam/index.jsp
டாக்டர்.அப்துல் கலாம்.வாழும் கடவுள்...... தினமும் இவரை வணங்கிவிட்டு தான் எனது பணியை துவக்குவேன்.. அப்படிப்பட்ட இவரை பற்றி தெரிந்துகொள்ள இது ஒரு மிக சிறந்த தளம்..

B -->
http://www.blogkut.com

இந்த வெப்சைட் ல .. போய்... கொஞ்சம் பிளாக்கர் எல்லாம் நேரம் இருக்கும் பொது போய் மேய்ந்து விட்டு வருவேன்.. நம்ம தமிழ்மணம் போலவே இருக்கும்.ஆனால்..இன்னும் கொஞ்சம் நிறைய தகவல் கிடைக்கும்..


C -->
http://www.cooltoad.com

அனைத்து மொழி சாங்க்ஸ் , வீடியோஸ் , புக்ஸ் இன்னும் நிறைய இங்கு கிடைக்கும்.. ரொம்ப ரொம்ப நல்ல வெப்சைட்.. நிறைய தகவல்கள் இருக்கு.. நான் ரொம்ப பாவிக்கிற இணையதளத்தில் இதுவும் ஒன்று..

http://www.charuonline.com/

இவருக்கும் , ஜெயமோகனுக்கும் சண்டை வரும் பொது போய்..படிச்சு மனச தேத்திகிறது..

http://www.cafe.ibibo.com

இது நம்ம ஓர்குட் மாதிரி தான்... நிறைய நண்பர்கள் பெறலாம்..சுலபமாக..இங்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க.. ஆனா போக தான் நேரம் இல்ல..

http://www.channelhaven.com

அனைத்து விளையாட்டு , டிவி ஆன்லைன் ல பார்க்குறதுக்கு இதவிட ஒரு சிறந்த வெப்சைட் இல்ல. ஆபீஸ் ல ஸ்க்ரீன் சின்னதா வச்சிக்கிட்டு நாங்க எல்லாம் இதுல ஒக்காந்து இருப்போம்..



D -->
http://www.dinamalar.com

காலையிலேயே நியூஸ் பேப்பர் படிக்கல என்றால் பயித்தியம் புடிச்ச மாதிரி ஆயிடும். எனக்கு தெரியும்.. இங்க ஏன்டா.. நீ போய் நியூஸ் படிக்கிற என்று கேட்குறது காதுல விழுது.. இங்க போய் நான் விளையாட்டு செய்தி மட்டும் படிப்பேன்.. மத்த நியூஸ் எல்லாம் சுமார் தான்..

http://www.dinamani.com

இங்க நியூஸ் நடுநிலையா இருக்கும்.. ஆனால் ஏன் இன்னும் இணைய தளத்தை புதுபிக்காம இருக்காங்கனு தெரியல..


E -->
http://www.esnips.com

இங்க போய் நிறைய வீடியோ , ஆடியோ, சிறந்த எழுத்தாளர் புத்தகம் இப்படி நிறைய தேடி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. ரொம்ப நல்ல வெப்சைட்.


F -->
http://www.freevbcode.com

நாம தான்... விசுவல் பேசிக் சிங்கம் என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல..( சும்மா சொல்லிக்க வேண்டியது தான்..என்ன பண்ணுறது? ஐந்து வருஷமா அதுல தான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்.). இங்க போனால் நிறைய ப்ரோக்ராம் சுடலாம்.. நம்ம பொழப்பே அதானே.!


G -->
http://www.google.com/transliterate/indic/Tamil

தமிழ்ல டைப் பண்ணுறதுக்கு இதவிட ஒரு மிக சிறந்த வெப்சைட் இருக்கும் என்று எனக்கு தோனல.. எப்போதும் இந்த இணைய பக்கம் தொறந்தே இருக்கும்..என் கணினியில்..


H -->
http://www.hotmail.com

ரொம்ப நல்ல வெப்சைட்.. மைக்ரோசாப்ட் வாங்குறதுக்கு முன்னாடி.. இருந்தாலும் இதுலயும் ரெண்டு ஈமெயில் அட்ரஸ் இருக்கு..


I -->
http://www.123india.com
கிரிகெட் ஸ்கோர் பார்க்குறதுக்கு மட்டும்..இங்க போவுறது..

http://in.tamil.yahoo.com
சினிமா செய்தி படிக்கிறதுக்கு மட்டும் இங்க போறது.. அதாவது கிசு-கிசு படிக்கிறது என்றால் ரொம்ப பிடிக்கும்..ஹீ.ஹி


J -->
http://www.jobsite.com/
உலகம் முழுவதும் வேலை தேடுவதற்கு இது ஒரு மிக சிறந்த தளம்.....
நான் மலேசியா எந்த ஒரு செலவும் இல்லாமல் வந்தது இங்க ரிஜிஸ்டர் பண்ணிதான்.. என்ன ரொம்ப நல்லவன் என்று சொல்லி .. என்னை மலேசியா அனுப்பி வச்ச வெப்சைட் இது..

K -->
http://www.keetru.com
http://www.koodal.com/
தமிழையும்.. தமிழ் செய்திகளையும்.. கவிதைகளையும் அறிந்து கொள்ள.. இது இரண்டும் மிக சிறந்த இணைய தளம்.


L -->
www.loosu.com
நீங்க லூசா ஆக வேண்டுமா..? இங்க போங்க .. தானாவே..லூசா ஆயிடுவீங்க..


M -->
http://mathy.kandasamy.net/

நம்ம மதியை பற்றி சொல்ல வேண்டுமா.. என்ன? நிஜமாலே இவங்க கிரேட்.நிறைய மூளை இருக்கு. நிறைய எழுதுவாங்க.. நம்ம பதிவர் வட்டத்துல இவங்கள பற்றி கேட்டு பாருங்க.. நம்ம மரத்தடி வெப்சைட் போனவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.

http://www.moneycontrol.com

ஷேர் மார்கெட் நியூஸ் எல்லாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒரு மிக சிறந்த இணைய தளம்.

http://www.mp3world.com

இங்க திரைப்பட பாடல்கள் இலவசமாக நிறைய டவுன்லோட் செய்யலாம்.

N -->
http://www.ndtv.com
ஆங்கில செய்திகளுக்கும் , கிரிகெட் ஒவ்வொரு பந்து-க்கு காம்மேண்டோரி படிக்கவும் மிக சிறந்த வெப்சைட்..

O -->
http://www.ottraiandril.com
வாரத்துக்கு இரண்டுமுறை இவருக்கு மொக்க போடுறது தான் வேலை.. அதான் இங்க போய் கொஞ்சம் மனச தேத்திகிட்டு போயிட்டு வந்துடுவேன்.. இவருக்கு போட்டியா இன்னும் ஒருத்தர் கூட மொக்க சூப்பர் ஆக போடுவார்.

P -->
http://www.pscode.com
இலவசமாக சாப்ட்வேர் ப்ரோக்ரம்மிங் ( .நெட் , ஜாவா) இப்படி நிறைய கோடிங் இங்க இருந்து சுடலாம்,. உரிச்ச வாழைபழம் போல் எல்லாம் இங்கயே இருக்கும்.. அப்படியே எடுத்து நாம பயன் படுத்தி கொள்ளலாம்.


http://www.photobacket.com
புகைப்படம் எல்லம் சேமித்து வைக்க இது ஒரு மிக சிறந்த தளம்.

Q -->
http://quote.yahoo.com/
இந்திய பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொள்ள மிக சிறந்த இணைய தளத்தை யாகூ இங்கே வழங்குகுறது,

R -->
http://www.rose4you.dk
இங்க தமிழ் , ஹிந்தி , தெலுங்கு பாடல்கள் , பாடல் வரிகள் எல்லாம் கிடைக்கும்.
கூடவே கொஞ்சம் சாட் பண்ணிகிலாம்.

http://www.rediffland.com
நம்ம பிளாக்கர் மாதிரியே இங்கயும் இருக்கு.. நிறைய கவிதை , தகவல்கள் சேமிக்கலாம்

S -->
http://www.sramakrishnan.com
மிக சிறந்த கதாசிரியர்.. உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.. உன்னாலே உன்னாலே படத்து எல்லாம் இவர் தான் வசனம்.. நல்லா கதை எழுதுவார். இவரின் தேசாந்திரி புத்தகம் ரொம்ப பிடிக்கும்.


T -->
http://www.techsatish.com
ஒரு முறை இங்க போயிட்டு வாங்க.. உலகத்துல உள்ள டிவி எல்லாம் பார்க்கலாம்.
எப்.எம் எல்லாம் கேட்கலாம், படம் எல்லாம் பார்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு..
மூன்று மொழியில இந்த வெப்சைட் இருக்கு.



U -->
http://www.Upstream.tv
வீடியோ எல்லாம் நிறய இருக்கும்.. ரொம்ப நல்ல வெப்சைட்,.

V -->
http://www.vyoms.com
உங்களுக்கு இந்தியாவுல உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் எல்லாம் தெரிஞ்சுகொள்ள வேண்டும் என்றால் நீங்க இங்க போய் இங்க பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.. ரொம்ப நல்ல வெப்சைட்..

http://www.vavaasangam.blogspot.com
சிரிப்பதற்கும் , சிந்திப்பதற்கும் எங்களை போன்ற வாலிபர்களுக்கும் இந்த தளம் தான் ஒரு ஆறுதல் தளம்...


W -->
http://www.wikipedia.org/
என்னை பொறுத்த வரை உலகின் மிக சிறந்த தளங்களில் இதுவும் ஒன்று,

X -->
http://www.xboard.us/

இங்க போனால் நிறைய டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. நிறைய படம் பார்க்கலாம். நிறைய நிறைய கத்துகலாம்.

Y -->
http://www.yellowpages.com/
அடிக்கடி பயன்படுத்துற வெப்சைட்.. நிறைய தெரிஞ்சுக்கலாம்.


Z -->
http://www.zapak.com
கேம் எல்லாம் விளையாடுறதுக்கு இதவிட ஒரு நல்ல தளம் எனக்கு தெரியவில்லை.


அப்பாடா... ஒரு வழியா எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்.. எனக்கு மறந்து போய் இருந்த எ பி சி டி எல்லாம் ஞாபகம் வர உதவியாக இருந்த எனது நண்பர் ஸ்ரீ அவருக்கு ரொம்ப நன்றி..

நான் ஆப்பு வைக்கிற ஆட்கள்.:

1.ரிஷான் ஷெரீப்
2.ஜி
3.நாமக்கல் சிபி.



Rule:

1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People

0 மறுமொழிகள்:

Post a Comment