rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

சென்ற வருடத்தின் மிக சிறந்த ஒரு புகைப்படம்



This is the Columbus, Ohio family that just had the sixtuplets, this picture is priceless!

சிட்டி லைட்ஸ் - வாழ்வின் பேரதிசயம்

சார்லி சாப்ளினின் கலை உச்சங்களில் ஒன்று சிட்டி லைட்ஸ். படத்தின் ஒரு ப்ரேம்கூட தேவையற்றது என ஒதுக்க முடியாத அளவுக்கு கச்சிதமான படைப்பு. அர்த்தமின்றி நகரும் வாழ்வின் பேரதிசயம் எதிர்பார்ப்பில்லாத அன்பில் மறைந்திருக்கிறது என்பதை கலாபூர்வமாக சொல்கிறது சிட்டி லைட்ஸ்.

webdunia photoFILE
சார்லி சாப்ளின் வீடில்லாத நகரத்தின் நாடோடி. ரொட்டிக்கான தினச‌ரி தேடுதல் வேட்டையில் ஒருநாள் தெரு ஓரம் பூ விற்கும் கண் தெ‌ரியாத இளம்பெண்ணை சந்திக்கிறார். சாப்ளின் ஒரு பணக்கார கனவான் என அந்தப் பெண் நினைக்கும்படி அந்த சந்திப்பு அமைந்து விடுகிறது.

அன்றிரவு தற்கொலைக்கு முயலும் செல்வந்தர் ஒருவரை சாப்ளின் காப்பாற்றுகிறார். தனது வீட்டிற்கு சாப்ளினை அழைத்துச் செல்லும் செல்வந்தர், இனி தற்கொலைக்கு முயல்வதில்லை என உறுதி அளிக்கிறார். இருவரும் சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஆட்டம் பாட்டத்துடன் அன்றிரவை கழிக்கிறார்கள்.

மறுநாள் செலவந்த‌ரின் வீட்டருகில் அந்த கண் தெ‌ரியாத இளம் பெண்ணை மீண்டும் சந்திக்கிறார் சாப்ளின். செல்வந்த‌ரின் கா‌ரில் அவளை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனிமையும், வறுமையும் நிறைந்த அவளின் வாழ்க்கை சாப்ளினுக்கு தெ‌ரிய வருகிறது.

இதனிடையில் செல்வந்தருடனான சாப்ளினின் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. போதையில் சாப்ளினுடன் நண்பராக அன்னியோன்யத்துடன் பழகுகிறவரால், போதை தெ‌ளிந்த பின் அதனை நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. சாப்ளினை வீட்டை விட்டு துரத்துகிறார். நமது நாடோடிக்கோ அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

பார்வையற்ற பெண் பல மாதங்களுக்கான வாடகை பாக்கி தர வேண்டியிருக்கிறது. இரண்டு நாளில் அதனை தர இயலாதபட்சத்தில் வீட்டை காலி செய்தாக வேண்டும். தனது ஏழ்மையை நினைத்து அழும் அவளை சாப்ளின் தேற்றுகிறார். கண் தெ‌ரியாதவர்களுக்கு பார்வை தரும் மருத்துவரை பற்றி பத்தி‌ரிகையில் வந்திருக்கும் செய்தியை படித்துக் காட்டும் அவ‌ர், வாடகை பணத்தை தானே தந்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்.

நமது நாடோடிக்கு இப்போது பணம் தேவை. அதிகமாக அதுவும் குறுகிய காலத்தில். குத்துச் சண்டை போட்டியில் தன்னுடன் மோதினால் ப‌ரிசுத் தொகையில் ச‌ரிபாதியை தந்து விடுவதாக கூறுகிறான் ஒருவன். நம்பிப் போனால் நிஜ குத்துச் சண்டை வீரனுடன் மோத வேண்டியதாகி விடுகிறது. அப்படியும் நம்பிக்கை இழக்காமல் இரவு நகரத்தை ரோந்து வரும் வேளையில் போதை செல்வந்தர் சாப்ளினை அடையாளம் கண்டு கொள்கிறார். வழக்கம்போல் வீட்டிற்கு அழைத்து செல்பவர் கண் தெ‌ரியாத பெண்ணின் சிகிச்சைக்கு ஆயிரம் டாலர் தருகிறார்.

அதேநேரம் செல்வந்த‌ரின் வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் திருடர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். போலீசை அழைக்கும் சாப்ளின் பணத்துடன் மாட்டிக் கொள்கிறார். செல்வந்தருக்கு சாப்ளினையோ, அவருக்கு பணம் கொடுத்ததோ நினைவில் இல்லை. சாப்ளினை திருடன் என முடிவு செய்கிறது போலீஸ். அவர்களிடமிருந்து பணத்துடன் தப்பிக்கிறார் சாப்ளின். கண் தெ‌ரியாத பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்து திரும்பும் வழியில் சாப்ளினை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. 

கிழிந்த உடையும், கலங்கிய மனதுமாக இப்போது சாப்ளின் ஒரு பிச்சைக்காரனுக்கு‌ரிய தோற்றத்தில் இருக்கிறார். தெருவில் நடந்துவரும் அவரை சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். சுற்றிலும் உள்ளவர்கள் ப‌ரிகாசத்துடன் சி‌ரிக்கிறார்கள். வேதனையுடன் திரும்பும் சாப்ளின் அப்படியே நின்றுவிடுகிறார். அவர் முன்னால் அந்த பூ விற்கும் பெண். அவளது தோற்றம் இப்போது சீமாட்டியைப் போல் மாறியிருக்கிறது. இப்போது அவள் தெருவில் பூ விற்கவில்லை. அவளுக்கென்று சொந்தமாக கடை இருக்கிறது.


சாப்ளினை பிச்சைக்காரன் என்று நினைக்கும் அவள், அவருக்கு பணம்தர முயல்கிறாள். சாப்ளின் வாங்க மறுக்கிறார். அவள் வலுக்கட்டாயமாக அவரது கையை பிடித்து தரும்போது அந்த ஸ்ப‌ரிசம் அவர் யார் என்பதை அவளுக்கு உணர்த்திவிடுகிறது. கண்ணீர் மல்க காதலர்கள் பார்த்துக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது. 

சாப்ளினின் அனைத்து திரைப்படங்களிலும் சமூக அவலங்களுக்கெதிரான விமர்சனத்தை காண முடியும். மனை திரைப்படத்தில் தெருவில் நடந்து வருவார் சாப்ளின். மாடியில் வசிப்பவர்கள் கொட்டும் குப்பை அவர் மீது விழும். மேலே பார்த்துவிட்டு நகர்ந்து செல்வா‌ர் சாப்ளின். சற்று தhரத்தில் வீதியின் ஓரம் குழந்தை ஒன்று அனாதையாக கிடக்கும். அதைப் பார்த்ததும் மேலே அண்ணாந்து பார்ப்பார். குப்பையை போல அந்த குழந்தை தெருவில் வீசப்பட்டிருப்பது அந்த மவுனமான ஒற்றை பார்வையில் வெளிப்படும்.

webdunia photoFILE
சிட்டி லைட்ஸ் படத்தின் முதல் காட்சியும் ஏறக்குறைய இப்படியொரு விமர்சனத்துடனே ஆரம்பமாகிறது. நகரத்தின் மேட்டுக்குடியினர் அமைதிக்காக திறக்கும் சிலையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார், சாப்ளின். அமைதிக்காக அவர்கள் திறக்கும் சிலையால் சாப்ளினின் இரவு தங்கும் இடம் பறிபோகிறது.

அதிகாரத்தை அது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பவர் சாப்ளின். அவரது படங்களில் போலீஸ்காரர்கள் அதிகாரத்தின் குறியீடாகவே காட்டப்படுகிறார்கள். ஹிட்லரை கண்டு உலகமே பயந்திருந்த நேரம், தி கிரேட் டிக்டேக்டர் படத்தில் ஹிட்லரை துணிச்சலாக விமர்சித்தவர் சாப்ளின். எந்திரமயமாகி வரும் உலகில் மனிதன் எந்திரங்களின் அடிமையாகும் அபாயத்தை விளக்குகிறது, மாடர்ன் டைம்ஸ்.

சிட்டி லைட்ஸில் சாலையை கடக்கும் சாப்ளின், மோட்டர் சைக்கிளில் இருக்கும் போலீஸ்காரரை தவிர்க்கும் பொருட்டு பக்கத்தில் நிற்கும் கா‌ரினுள் புகுந்து சாலையின் மறுபுறம் உள்ள நடைபாதைக்கு வருவார். அவர் கார் கதவை திறக்கும் சத்தத்தை வைத்தே அவர் ஒரு செல்வந்தர் என்ற முடிவுக்கு வருகிறாள் தெருவில் பூ விற்கும் அந்த கண் தெ‌ரியாத இளம் பெண்.

சாப்ளினின் திரைப்படங்களில் மனிதர்களின் உளவியல் துல்லியமாக சித்த‌ரிக்கப்பட்டிருக்கும். சிட்டி லைட்ஸில் செல்வந்த‌ரின் வேலைக்காரன் சாப்ளின் மீது சதா வெறுப்பை காட்டுகிறான். சமூக அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்த ஒருவனுக்கு பணிவிடை செய்ய நேர்ந்த சாமானியனின் வெறுப்பு அது. 

அதேபோல் தெருவில் சாக்கடையை ச‌ரி செய்கிறவன் குழிக்குள் இருக்கும் போது அவனிடம் எதிர்த்து பேசும் சாப்ளின் அவன் வெளியே வந்ததும் அவனது உயரத்தைப் பார்த்து பின்வாங்குவார். எளியோனை வலியோன் அடக்க நினைக்கும் அனைத்து இடங்களிலும் பொருத்திப் பார்க்க தகுந்த காட்சி அது. நாம் மேலே பார்த்த காட்சிகள் அனைத்தும் படத்தில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்பவை என்பது முக்கியமானது.

சிட்டி லைட்ஸின் ஒவ்வொரு பிரேமையும் இப்படி தனித்தனியாக வியந்து சொல்ல இயலும். மேலும், நகரத்தின் நாடோடியான ஒருவனின் அர்த்தமில்லா வாழ்க்கையை எதிர்பார்ப்பில்லாத அன்பு அர்த்தம் மிகுந்ததாக்கி விடுவதையும் சொல்கிறது சாப்ளினின் இந்தப் படம். 

எதிர்பார்ப்பில்லாத அன்புதானே மானுட வாழ்வின் பேரதிசயம்

வாழ்க்கை பயணம்.







இதோ இன்றும் ஒரு ரசனையற்ற மரக்கட்டையை
போல் நகர்கிறது எனது வாழ்க்கை பயணம்..
மரணம் வெகு அருகில் தான் உள்ளது என்பதை
ஒவ்வொரு முறையும் உணர்த்தி செல்கிறது
உனது புன்முறுவல் சிரிப்பின் நினைவுகள்....

****************

நாட்கள் கடந்து பயணித்து செல்கின்றன..
ஒரு நீண்ட பயணத்தின் போது உன் நினைவை
அழைத்து சிறிது கண்ணிருடன் நான் சொன்ன
வார்த்தை "இப்பிரிவு நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்.."


************************


மாதங்கள் பல கழிந்து ஒரு மாலை பொழுதில்
உன்னிடம் இருந்து வரும் தொலைபேசி
அழைப்பினை வேண்டுமென்றே துண்டித்த
பிறகு இருவரும்..

மௌனத்தினால்..திட்டிகொண்டோம்
அவர் அவர் மனதிற்குள்..

********************.

பிரிவு

ஒரு நீண்ட பிரிவுக்கு பின்னர்
உன்னிடம் இருந்து வந்த தொலைபேசி
அழைப்புக்கு பின் தத்தம் தவறுகளை பரிமாறி
கொண்டன நம் மௌனங்கள்.....


***********************


நாட்கள் கடந்து பயணித்து செல்கின்றன..
ஒரு நீண்ட பயணத்தின் போது உன் நினைவை
அழைத்து சிறிது கண்ணிருடன் நான் சொன்ன
வார்த்தை "இப்பிரிவு நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்..

தொடரும் கவித்துவமான தவறுகள்..!







தேடலின் தொடக்கம் , முடிந்த ஒன்றை
முழுமுயற்சியாய் தேடுகிறேன். அதோ ஒரு நீல
நிற ஆன்மாவை நோக்கி நடந்து செல்கையில்
எனக்கே தெரியாமல் முடிகிறது எனது
பயணம்.. எங்கே நான்?



**** **** **** *****



சூரியனை விழுங்கி , சந்திரன் தன்னை வெளிக்கொணரும்
ஒரு மாலை நேரம் அவளுடைய நினைவை தாங்க
முடியாமல் ஒரு சிறிய காணிக்கையாய் எனது
சிவப்புகளை பூமிக்கு சமர்பித்து விடைபெறுகிறேன்...


**** **** **** ****




பிரிதலின் உச்சத்தில் நீ விலகையில்
நான் உன்னைதொடர்ந்து நான் பயணித்த
எனது தேடல் பயணம் இன்றும் தொடர்கிறது
முடிவில்லா கடற்கரையாய்........


**** ***** ***** *****

பிறந்த நாள்.. கவிதை


எனது தேசிய தினம் கூட மறந்துவிடுகிறது..
இத தேவதையின் பிறந்த நாளுக்காக..!.

நான் அனுப்பும் பிறந்த நாள்
பரிசுகளைசேகரிக்க வேண்டுமானாலும் பரவாயில்லை..
சேதபடுத்திவிடாதே.....

அது என்னவோ தெரியவில்லை..
உன்னுடைய பிறந்தநாள் மட்டும் ஒரு
திருவிழாவாக தெரிகிறதே எனக்கு...

இன்றாவது உனது காதலை சொல்ல மாட்டாயா..?
என எதிர்பார்த்து.. உனதுபிறந்த நாளை வரவேற்கிறேன்..
ஒவ்வொரு வருடமும்...எனக்கு தெரியும்..
சென்ற வருடம் போல்தான் இந்த வருடமும்
என்று.. இருந்தும் வாழ்த்துகிறேன்..உன்னை..
இன்றாவது எனது வாழ்த்தை ஏற்றுகொல்கிறாய்
என்ற சந்தோஷத்தில்...

கொஞ்சம் மோகமும் , கொஞ்சம் கோபமும்













நமது கண்களும் நினைவும் மீண்டு
உயிர்த்தெழும் வரை போரிட்டு கொண்டே
இருப்பேன் எனது இதழ்களால்.....
பார்ப்போம் வெற்றி யாருக்கு கிட்டும் என்று....!.!..!






















உனது ஸ்பரிசம் தொட்டு எனது காதலை
வெளிப்படுத்திய இடம்...என் காதல்
அழியவில்லை என்பதற்கு இதைவிட
வேறென்ன சாட்சி வேண்டும் எனக்கு...
போடி....
















உரையாடலின் உச்சத்தில் இருக்கும் போது
என்னை திசை மாற்றி விட்டுவிட்டு நீ
கொடுக்கும் முத்தம் எல்லாம் இன்று
வசை பாடிவிட்டு திசை மாறி போனது.. ஏனடி...?
புரியவில்லை எனக்கு உன் கோபம்...
இது நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்...















இயலாமையின் வலியின் உச்சத்தில்
இருக்கும் என் மனது அதன் விரக்தியை
என்னுள் இருந்து குருதியை வெளியேற்றி
அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறது... நான்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்...




















அன்று உனக்காக நான் வாங்கிய வெள்ளை
ரோஜா இன்றும் என் கையில்....சிறு மாற்றம்
வர்ணம் மட்டும் சிகப்பாய் மாறியுள்ளது.
இன்னும் சில நேரங்களில் அதனை பற்றி
இருக்கும் எனது கரமும் மாற தொடங்கிவிடும்..

அழைபேசி..அழகி பேசி.....அழகாய் பேசி..

நீ தொடர்புகொண்டு என்னிடம்
பேசும் போது எல்லாம் நான்
தொடர்பிழந்து நிற்கிறேனே ஏனடி...?
இன்னும் புரியவில்லை காரணம் எனக்கு...!

* * * - - - - - - -

ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்.

*** - - - - - - - -

தொலைபேசியில் பேசும் போது
முத்தம் தரவில்லை என்று வருத்தபடுகிறாய்,
நாம் பேசும் போது நமக்கு பதில் , நமது வார்த்தைகள்
ஒன்றை ஒன்று முத்தமிட்டு கொண்டுதான் உன்னையும் என்னையும்
வந்தடைகிறது என்பதை நான் எப்படி சொல்லி
புரியவைப்பேன் உன்னிடம்...!

*** - - - - - - -

உன்னிடம் பேசுகையில்
உன் "ஹம் ", "ப்ச்" , "ஹேய்"
இந்த வார்த்தைகளுக்கு நடுவில்
மற்றவை தோற்று போய் நிற்கின்றன.
காரணமே தெரியாமல்..

*** - - - - -- - -

திமிர் பிடித்த காதல்

*

சொல்லுவதற்க்காக நான் சென்ற
ஒவ்வொரு நாட்களும்
நீ என்னை கொல்லுவதற்காக (உன் பார்வையால்)
வந்தாய் என்பது ஏன் எனக்கு அப்போது
தெரியாமல் போய்விட்டது..?

*

பல நாட்களுக்கு பிறகு நமது
காதல் கடிதத்தை படிக்கும் போது
சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..
மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த
கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு
சிரித்துவிட்டு சென்றது..

*

இருமுறை காதல் கொள்ளும்
தோழமைகளே.. உங்களுக்கு
மட்டும் எப்படி முடிகிறது..?
கடவுள் இரு மனசையாய்
கொடுத்துள்ளான்..?

*

வரம் ஒன்று கேட்க வேண்டும் என்றால்
இரவு நேரத்தில் மட்டும் எனது உயிரை
எடுத்துகொண்டு பகலில் கொடுத்துவிடு
இறைவனே.? இனியும் வேண்டாம்
எனது செத்து பிழைக்கும் விளையாட்டு
இரவில்..

*

இந்திய அணியின் மனப்போக்கை மாற்றிய "தாதா"!


1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் உதித்த சௌரவ்கங்கூலி என்ற 'பெங்கால் டைகர்', ரசிகர்கள் செல்லமாகஅழைக்கும் "தாதா"வின் கிரிக்கெட் வாழ்வு, அவரேஎதிர்பார்த்ததைப்போல இந்தியா ஆஸ்ட்ரேலியாவைவீழ்த்தியது மூலம் மகிழ்ச்சிகரமாகநிறைவடைந்துள்ளது.தோனி தலைமையில் இந்தியஅணி அடுத்தக் கட்டத்தை நோக்கி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில்,இந்த உயர்விற்கு தனது தலைமைப் பொறுப்பின் கீழ்,நியாயமற்ற அவப்பெயர்களுடன், அடித்தளமிட்டுக்கொடுத்த கங்கூலியை நாம் மறக்க முடியாது.குறிப்பாகஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் நாக்பூர்டெஸ்டிற்கு முன்னால் பேசிய வீர வசனத்தில், நாங்கள் டெஸ்டை வென்றுகங்கூலிக்கு மகிழ்ச்சியான ஓய்வு தினங்களை மறுப்போம் என்றார். அவரது பேச்சுவெறும் பேச்சு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டு இந்த வெற்றி கங்கூலிக்கும்அவரது மன உறுதிக்கும், அவர் கிரிக்கெட்டை ஆடிய விதத்திற்கும், அவர்அணியை வழி நடத்திய திறனிற்கும் ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.உலகின்மிகப்பெரிய பேட்ஸ்மெனாக கருதப்படும் டான் பிராட்மேன் போலவே தன்கடைசி இன்னிங்சில் கங்கூலி ரன்கள் எடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.ஆனால் நாக்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 89 ரன்கள் அணியைவெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.கங்கூலியைப் பற்றிஉலக கிரிக்கெட்டில் பரந்துபட்ட கருத்துக்கள் வளைய வந்துள்ளன. அவரால்பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாது என்று கூறுபவர் உளர், வேறு சிலருக்கோஅவர் "ஆஃப் திசையின் கடவுள்" - அதாவது ஆஃப் திசையில் அவர் ஆடும்டிரைவ்கள், கட் ஷாட்கள் ஆகியவை அவரை டேவிட் கோவருக்கு பிறகு அழகாகவிளையாடும் இடது கை ஆட்டக்காரர் என்று அழைக்க வைத்தது. நம்அனைவருக்கும் கங்கூலியின் ஆக்ரோஷமான அணித் தலைமைப் பொறுப்புபிடித்தமானது, அவரது அணித் தலைமையில் அதிக டெஸ்ட் போட்டிகளைவென்று இந்திய அணியை தற்போது இருக்கும் உயர்வு நிலைக்கும், போட்டிஉத்வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் அடிக்கல் நாட்டியது என்ற வகையில்பலருக்கும் பிடித்தமான ஒரு வீரர் கங்கூலி. வேறு சிலருக்கோ அவர் ஃபீல்டிங்செய்ய லாயக்கற்றவர். இவ்வாறாக கங்கூலி பற்றிய கருத்துக்கள் ஒருபுதிர்ப்பாதையில் பயணிப்பது போல் இருந்து வந்துள்ளன.இந்தியாவின்மிகச்சிறந்த அணித் தலைவர் கங்கூலி என்பதை உலகின் எந்த ஒரு கிரிக்கெட்வீரரும் மறுக்க முடியாது. அவரை பாராட்டிய இலங்கை வீரர்களான ங்ககாரா,ஜெயவர்தனே, ரணதுங்கா ஆகியோர் அவரது தலைமைப் பொறுப்பு பற்றி புகழ்ந்துகூறியுள்ளனர். ஒரு வீரராக கங்கூலியை நாம் முதலில் பார்ப்போம்:


ஒரு வீரராக கங்கூலி
1996ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ஸில்அவர் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தைஎடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன் வருகையை அறிவித்தார்.பிறகு அடுத்த டெஸ்டில் மீண்டும் ஒரு சதம், இப்படித்தான்அவர் துவங்கினார்.இவருடன் திராவிடும் தன் முதல்டெஸ்டை விளையாடினார். இந்தியாவின் மிகச்சிறந்தபேட்டிங் சேர்க்கை அமைந்தது அப்போதுதான்: சச்சின்,கங்கூலி திராவிட். டெஸ்ட் போட்டியில் இவ்வாறு அபாரமாகதுவங்கியவர், ஒரு நாள் போட்டிகளில் அப்போதைய கேப்டன் அசாருதீனின்முடிவின் படி சச்சின் டெண்டுல்கருடன் களமிறக்கப்பட்டார். பிற்பாடு சச்சினும்கங்கூலியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளும் அஞ்சும் ஒரு துவக்கஜோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போதைய உலக சாம்பியன்அணியான இலங்கை அணிக்கு எதிராக 113 ரன்களை விளாசி தன் முதல் சதத்தைஎட்டினார். அதன் பிறகு அதே ஆண்டில் சகாரா கோப்பை கிரிக்கெட்டில் 4 ஒருநாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று தன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் இந்திய அணியை தொடரை வெல்லச் செய்தார்.இந்த தொடரில்தான்அவரது சிறந்த ஒரு நாள் போட்டி பந்து வீச்சு அமைந்தது. 10 ஓவர்களில் வெறும்16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு சதங்களை அடித்தார். ஆனால்இவரது போராட்ட குணம் கிரிக்கெட் உலகிற்கு தெரிய வந்த போட்டி டாக்காவில்நடந்த சுதந்திரக் கோப்பை இறுதிப் போட்டியே. பாகிஸ்தான் நிர்ணயித்த 315ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியை தன் 124 ரன்கள் அதிரடிஇன்னிங்சினால் வெற்றி பெற வைத்தார். 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கைஇந்தியா முதன் முதலாக துரத்தி வெற்றி பெற்றது அப்போதுதான். அதன் பிறகுசில 300 ரன்களை இந்தியா துரத்தும் போதும், இலக்காக நிர்ணயிக்கும்போதுகங்கூலியின் பங்கு அபரிமிதமானது.1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றஉலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக 158 பந்துகளில் 17பவுண்டரிகள் 7 சிக்சர் சகிதம் 183 ரன்களை விளாசினார் கங்கூலி. உலகக்கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிக பட்ச தனிப்பட்ட ரன்எண்ணிக்கையாகும். ராகுல் திராவிடும் கங்கூலியும் இணைந்து குவித்த 318ரன்கள் எந்த ஒரு விக்கெட்டிற்கு இடையேயும் குவிக்கப்பட்ட அதிகபட்சரன்களாகும்.அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன்டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஒரு நாள்போட்டிகளில் அந்த சீசனில் மட்டும் 5 சதங்களை எடுத்து .சி.சி. ஒரு நாள் தரவரிசையில் அவர் முதலிடத்தை பிடித்தார்.பிறகு 272 ஒரு நாள் போட்டிகளில்10,000 ரன்களைக் கடந்ததன் மூலம் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 10,000ரன்களைக் கடந்தவர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார் கங்கூலி.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது பங்களிப்புஅவரது தலைமையின் கீழ் அபாரமாக இருந்தது. மேற்கிந்தியதீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தன் பேட்டிங்கிற்கு புதியபரிமாணம் அளித்த கங்கூலி, அங்கிருந்து தொடங்கி, 2002இங்கிலாந்து தொடரில் அபாரமான இரண்டு அரைசதங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்தியஅணி டெஸ்ட் தொடரில் 0- 1 என்று பின் தங்கியிருந்தபோதுலீட்சில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இவர் அடித்த 138ரன்களும், சச்சினுடன் சேர்ந்து எடுத்த 200-க்கும் அதிகமானரன்களும் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றது.பிறகு 2003 உலகக்கோப்பை போட்டிகளில் 3 சதங்களை அடித்தார். 2004ஆம் ஆண்டு புகழ் பெற்றஆஸ்ட்ரேலிய தொடரில் பிரிஸ்பேனில் அவர் அடித்த 144 ரன்கள் அணியின்உத்வேகத்தை அதிகரித்து. அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்தியா தன்பேட்டிங்கின் மூலம் வறுத்து எடுத்தது நம் அனைவரின் நினைவையும் விட்டுஅகலாதது.ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்களையும் 72 அரைசதங்களையும்41.02 என்ற சராசரியிலும், டெஸ்ட் போட்டிகளில் 113 டெஸ்ட் 7212 ரன்கள் சராசரி42.17 என்றும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40திற்கும் மேற்பட்டசராசரியை வைத்திருக்கும் உயர்வான நிலையில் அவர் தன் ஓய்வைஅறிவித்துள்ளார்.அவரது பேட்டிங் திறன் மீது கடுமையாக விமர்சனம் வைத்தகிரேக் சாப்பல் முதல் தொடங்கி நம் பிஷன் சிங் பேடி வரையிலும், 2006 ஆம்ஆண்டு அணிக்கு மீண்டும் அவர் நுழைந்த பிறகு ஆடிய விதத்தில் நிச்சயம்குறைகாண இடமில்லை. இந்த காலக்கட்டத்தில் கங்கூலியின் சராசரி 60ரன்களுக்கு அருகில் உள்ளது என்பதும், இதே காலக் கட்டத்தில் அணியின் மற்றவீரர்களின் சராசரி இவருக்கு அருகில் இல்லை என்பதும் இவரது பேட்டிங் பற்றிவிமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துள்ளது.இந்தியாவின்சிறந்த அணித் தலைவர் கங்கூலி1998ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரைஇந்திய கிரிக்கெட் ஒரு பெரிய சரிவை சந்தித்து வந்தது. சச்சின் டெண்டுல்கர்கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கிரிக்கெட் உலகை ஆட்ட நிர்ணயசூதாட்டங்கள் உலுக்கி வந்தன. இந்திய கிரிக்கெட்டையும் அது பிடித்துஉலுக்கிவந்தது. அரசல் புரசலாக அசாருத்தீன் மேல் கடும் குற்றச்சாட்டுகள்எழுந்தன. இதனால் சச்சின் டெண்டுல்கரால் ஆஸ்ட்ரேலிய தொடரில் அவர்நீக்கப்பெற்றார்.இவருடன் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியாவும் நீக்கப்பட்டார்.கபில்தேவ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அணியில் கர்நாடக மாநிலவீரர்கள் மட்டும் 8 பேர் இருந்தனர். சச்சின், கங்கூலி கனிட்கர் தவிர அனைவரும்கர்நாடகா வீரர்கள். அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்று தோற்றது.உடனேயே தென் ஆப்பிரிக்க அணி இங்கு வந்தது, சச்சின் டெண்டுல்கர் முதல்டெஸ்டை தோற்றவுடன் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார்.இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டி வரை அணித் தலைமையில் நீடித்தார். அந்தடெஸ்டிலும் இந்தியா தோல்வி. தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியாதோற்றது.